#

குழந்தைகளுக்கான நல்ல நீதி கதைகள்

Children Stories நன்றி மறந்த சிங்கம்,Moral Stories,நீதி கதைகள்

Tamil story for childrens - Moral Stories

தமிழ் சிறுவர் கதைகள் இதில் சுவையான பல கதைகள் உள்ளன

story for kids tamil

தமிழ் நீதி கதைகள்

சிறிய குழந்தைகளுக்கு கதை கேட்பதற்கு மிகவும் பிடிக்கும், அவர்களுக்காக நீதி கதைகள் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Home /Moral Stories

நன்றி மறந்த சிங்கம், Man and Lion

Man and Lion
ஒரு நாள் வேடன் ஒருவன் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றபோது,
திடீரென காட்டில் எங்கிருந்தோ ஒரு சிங்கத்தின் கர்ஜனை அவனை பயந்து ஓட வைத்தது.

அப்போது

மனிதா....பயப்படாதே உன் வலப்பக்கம் பார்....யாரோ விலங்குகளைப் பிடிக்க வைத்த கூண்டில் நான் மாட்டிகொண்டுவிட்டேன்.

கூட்டைத் திறந்து என்னை விடுவிக்கிறாயா? என்றது சிங்கம்

வேடன் சொன்னான்,"சிங்கமே... நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன் உன்னை விடுவித்தால் வெளியே வந்து என்னை உணவுக்காக நீ கொன்று விடுவாயே."

"கண்டிப்பாக மாட்டேன்.என்னை காப்பற்றும் உன்னைக் கொல்வேனா...மாட்டேன்,
அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற " என சிங்கம் சொல்ல ...

வேடன் கூண்டைத்திறந்து சிங்கத்தை விடுவித்தான்.

Man and Lion
நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று. இதனைக் கண்ட வேடன்
'சிங்கமே நீ செய்வது நியாயமா?, இதுதானா நீ காட்டும் நன்றியா?'' என்றான்".

அப்போது

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய வேடன் நடந்த
கதையனைத்தையும் நரியிடம் கூறினான்,சிங்கமும் நரி சொல்வதை தான் கேட்பதாகக் கூறியது.

அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து விட்டது.

உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது.

நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல
முதலிலிருந்து நடந்ததைக் கூறுங்கள் நீங்கள் எந்த கூண்டில் எப்படி இருந்தீர்கள்' என சிங்கத்திடம் வினவ ,
உடனே சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்று ' இங்கே இப்படித்தான் இருந்தேன் என்றது.'

இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

Man and Lion
"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

சிங்கத்திடம் ' என்னை மன்னியுங்கள்.நீங்கள் உங்களை காப்பற்றுபவனுக்கு கொடுத்த உறுதிமொழியை மீறி கொல்ல நினைப்பது நம்பிக்கை துரோகமாகும்.ஆகவே தான் இப்படி நடந்துகொண்டேன்' என்று நரி கூறியது.

நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.

நீதி

Man and Lion

ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.